News

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: 30 சுரங்க தொழிலாளர்கள் பலி

 

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அன்று பாரம்பரிய தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில், குறைந்தது 30 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மேலும் பலர் உள்ளே சிக்கியிருப்பதாக அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் தெரிவித்தனர்.

உயிர் பிழைத்த சுரங்க தொழிலாளர்களில் ஒருவரான ஃப்ளோரியன் ககுவெண்டேவின் கூற்றுப்படி, நானா-மாம்பெரே மாகாணத்தின் அப்பா பகுதியில் இந்த சுரங்கம் இடிந்து விழுந்தது.

உள்ளே சிக்கியிருப்பதாக நம்பப்படும் கூடுதல் சுரங்கத் தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும், ஆனால் அவர்களை உயிருடன் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் “குறைந்து கொண்டே வருகின்றன” என்று அவர் கூறினார்.

சுரங்க விபத்து குறித்து பேசிய மாகாணத்தின் துணை மேயர், சுலைமான் பி, மீட்புக் குழுவினரும் அப்பகுதி மக்களும் பல மணி நேரம் போராடி இடிந்து விழுந்த சுரங்கத்தில் இருந்து 30 உடல்களை மீட்டதாகவும், காயமடைந்த சுரங்க தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top