அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மூன்று சிறுவர்கள் மற்றும் ஒரு பெரியவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர் “சுட்டுக் கொல்லப்பட்டார்” என தெரிவித்துள்ளது. “தற்போதைய நிலையில், பலர் பாதிக்கப்பட்டிருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்,” என்று உள்ளூர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், குறைந்தது இரண்டு பேர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
“தற்போதைக்கு அவர்களின் நிலை தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர்,” என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட அமலாக்க துறையை மேற்கோள் காட்டி, மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவர் என நான்கு பேர் கொல்லப்பட்டதாக சி.என்.என். மற்றும் சி.பி.எஸ். நியூஸ் ஆகிய இரு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. காவல்துறை இந்த தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
