News

வெடிகுண்டு மிரட்டல்: ஒஸ்ட்ரியன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாகத் தரையிறக்கம்!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து ஒஸ்ட்ரியத் தலைநகர் வியன்னா நோக்கிப் பயணித்த ஒஸ்ட்ரியன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த விமானம் பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

பல்கேரிய போக்குவரத்து அமைச்சை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.

51 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 57 பேருடன் பயணித்த எயார்பஸ் ஏ320 ரக விமானம், டெல் அவிவிலிருந்து மாலை 6.40 மணியளவில் வியன்னா நோக்கிப் புறப்பட்டுள்ளது.

ரோமானிய எல்லைக்கு அருகிலுள்ள வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான எச்சரிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து, விமானத்தைச் சோஃபியாவுக்குத் திருப்புவதற்கு விமானக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

இதனையடுத்து, பல்கேரிய விமானப்படையின் போர் விமானம் ஒன்று, குறித்த பயணிகள் விமானத்தைச் சோஃபியா விமான நிலையம் வரை பாதுகாப்பாக வழிநடத்தியுள்ளது.

இரவு 9.25 மணியளவில் விமானம் சோஃபியா விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் முன்னெடக்கபட்டு வருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top