News

விரைவில் கோட்டாபய கைது செய்யப்படலாம்.. நீதிமன்றத்தின் தீர்ப்பால் கலக்கத்தில் ராஜபக்சக்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என அரசியல் பரப்பில் பேசப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்து தடுத்து வைப்பதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி அவசர அவசரமாக கோட்டாபய ராஜபக்ச இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top