News

அழிக்கப்பட்ட துயிலுமில்ல கல்வெட்டுகளுடன் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்

மாவீரர் நாள் இறுதிநாள் நிகழ்வுகள் நாளைய தினம் (27) முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவாலயம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அலுவலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் (26) இந்த நினைவாலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் துயிலுமில்லங்கள் இராணுவத்தினரால் இடித்து அகற்றப்பட்ட நிலையில் வித்துடல்கள் விதைக்கப்பட்ட கல்லறையின் கல்வெட்டுக்கள் இந்த நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தன.

இதேவேளை மாவீரர் நாள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்கப்பட்டு, 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு , 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top