News

மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை : ஜப்பான் கடலில் ஏவப்பட்ட ஏவுகணைகளால் போர்ப் பதற்றம் 

 

சர்வதேச நாடுகளின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல், வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தி கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சீண்டிவரும் வடகொரியா, தன் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதியான சண்டக் நகரிலிருந்து 2க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது.

இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதியில் சென்று விழுந்ததாகத் தென்கொரிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயார் எனத் தெரிவித்து வரும் வடகொரியா, இந்த ஆண்டும் தொடர்ச்சியாகப் பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ஏவுகணை ஏவப்பட்டுள்ளமை உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஜப்பானைச் சேர்ந்த கிரிப்டோ கரன்சி நிறுவனத்திடமிருந்து பல பில்லியன் டொலர்களை வடகொரியா திருடியுள்ளதாகத் தென்கொரியா சமீபத்தில் குற்றஞ்சாட்டியுள்ள சூழலில், இந்த புதிய ஏவுகணை சோதனை அந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top