எத்தியோப்பியாவில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புலம்பெயர் தொழிலாளர்கள் 22 பேர் கொல்லப்பட்டனர்.
எத்தியோப்பியாவின் வடகிழக்கு அபார் பகுதியில் செமரோ நகரில் 100க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிய லாரி ஒன்றில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவர்கள் பயணித்த லாரி எங்கு இருந்தது எங்கே பயணித்தது என்பது பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் சென்ற லாரியின் பாதையானது, எத்தியோப்பியாவில் இருந்து ஜிபோட்டி வழியாகவும், செங்கடலைக் கடந்து ஏமன், சவூதி அரேபியா மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதாகும்.
வேலை தேடி வளைகுடா நாடுகளுக்கு பயணிக்கச் செல்லும் புலன் பெயர்ந்தோர்களுக்கு ஏமன் ஒரு முக்கிய பாதை. எனவே, லாரியில் பயணித்தவர்கள் வேலை தேடி சென்றவர்களாக இருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
