News

உக்ரேனிய பயணிகள் பேருந்தை குறிவைத்த ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில்- 12 பேர் பலி, 7 பேர் படுகாயம்

 

அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனின் தென் கிழக்கு பகுதியான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்-கில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைனின் நிப்ரோ நகரில் நேற்று ரஷிய ராணுவம் திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது குண்டு பாய்ந்ததில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ரஷ்யா ட்ரோன் மற்றும் பீரங்கிகளை பயன்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக ரஷ்யா ஒரே நாள் இரவில் 90 ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top