News

14 தளங்கள் மீது தாக்குதல் 100 ற்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர் பலி : ஈரான் அறிவிப்பு

தம் நாட்டின் மீதான தாக்குதலை அடுத்து அமெரிக்காவின் 14 படைத்தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100 ற்கும் மேற்பட்ட அமெரிக்கப்படையின் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.மேலும், அந்த நாடுகளின் முக்கிய இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் தாக்குதலால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. புர்ஜ் கலிபாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார் நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top