News

டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச்சூடு: NASA உதவித்தொகை பெற்ற மெக்கானிக்கல் இன்ஜினீயர் கைது

 

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சங்க இரவு விருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்கடனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் நடைபெற்றது.

இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரின் மனைவி மெலனியா, துணை அதிபர் வான்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வு நடந்துகொண்டிருக்கும் அங்கு புகுந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

விருந்து நிகழ்ச்சியின் போது சுமார் எட்டு முறை துப்பாக்கி சுடப்பட்ட சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் பாதுகாப்பு அதிகாரிகள் அதிபர் டிரம்ப், மெலனியா ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோரைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதன்போது டிரம்ப் கீழே தடுமாறி விழுந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் மற்றும் பிரபலங்கள் மேஜைகளுக்கு அடியில் ஒளிந்து கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

பின்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி மட்டும் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நபரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் டிரம்ப் மீது நடக்கும் 3 வது கொலை முயற்சி இதுவாகும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top