நிலநடுக்கத்தினால் காயமடைந்த 1,520 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், இதுவரை 157 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடிபாடுகளுக்குள் மேலும் 200க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், அவர்களைத் தேடிப் மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Immense damage seen to buildings across Venezuela’s capital of Caracas, following what now appears to have been a “double-event” 7.2 and 7.5 magnitude earthquake back-to-back near the coast in Northern Venezuela, according to the U.S. Geological Survey (USGS). pic.twitter.com/XoG2jSJMf2
— OSINTdefender (@sentdefender) June 24, 2026
கடந்த புதன்கிழமை இரவு ரிச்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இதுவரை 138 அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இந்த இயற்கை அனர்த்தத்தினால் 250 கட்டிடங்கள் மற்றும் 20 வணிக வளாகங்கள் உட்பட 346 உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் 8 வைத்தியசாலைகளும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வைத்தியசாலைகளை மறுசீரமைப்பது உள்ளிட்ட அவசரக் கட்டுமானப் பணிகளுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியத்தை உருவாக்க வெனிசுவேலா அரசு தீர்மானித்துள்ளது.
இந்த அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ் நாட்டில் தேசிய அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
