News

பிரான்ஸ் – ஸ்பெயினில் விஸ்வரூபம் எடுத்த காட்டுத்தீ: 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நிலைமையைச் சமாளிக்க பிரான்ஸ் சர்வதேச உதவியைக் கோரியுள்ள நிலையில், ஸ்பெயின் தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது.

பிரான்சின் போர்டோ மற்றும் கேப் ஃபெரட் உள்ளிட்ட தென்மேற்குப் பகுதிகளில் காட்டுத்தீ அதிவேகமாகப் பரவி வருகிறது. கிரோண்டே மற்றும் லேண்டெஸ் பிராந்தியங்களில் இருந்து இதுவரை 1,41,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த பிரெஞ்சு அரசு இராணுவத்தைக் களமிறக்கியுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியையும் கோரியுள்ளது.

பிரான்ஸ் - ஸ்பெயினில் விஸ்வரூபம் எடுத்த காட்டுத்தீ: 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்! | Wildfires Escalate In France And Spain

தலைநகர் மாட்ரிட்டின் மேற்குப் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ தீயணைப்பு வீரர்களின் கட்டுப்பாட்டைத் தாண்டி எரிகிறது. பலத்த காற்று காரணமாக இரண்டு பெரிய தீப்பிழம்புகள் ஒன்று சேர்ந்து மாட்ரிட் பிராந்தியத்தை அச்சுறுத்தி வருகின்றன.அங்கு 25,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரதமர் பெட்ரோ சான்செஸ் அவசர நிலவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பிரான்சின் பிரசித்தி பெற்ற கடற்கரை சுற்றுலாப் பகுதியான கேப் ஃபெரட் தீபகற்பத்தில் இருந்து சாலை வழி அடைக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான மக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மே மாதம் முதல் ஐரோப்பாவைத் தாக்கி வரும் தொடர் வெப்ப அலைகள் மற்றும் கடுமையான வறட்சியே இத்தகைய பெரும் காட்டுத்தீக்கு முக்கியக் காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top