யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது.
இன்று காலை 06.30 மணியளவில் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை இருப்பிடத்திற்கு வருகைத் தந்த பொலிஸார் அதனை அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.
சுமார் 10 பொலிஸ் அதிகாரிகள் உருவச்சிலை இருப்பிடத்திற்கு வருகைத் தந்து, பலவந்தமாக சிலையை அகற்றி அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
