News

லண்டனில் அதிரடி சுற்றிவளைப்பில் தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கைது

பிரித்தானியாவில் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக தங்கியிருந்த தமிழர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

2026 ஆம் ஆண்டின் கடந்த மாதம் வரையான காலப்பகுதியில் லண்டன் முழுவதும் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சின் புள்ளிவிபரங்களுக்கு அமைய 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் பிரித்தானியாவில் சட்டவிரோத வேலைவாய்ப்பு தொடர்பான சோதனைகளின் எண்ணிக்கை 7,270 ஆக உயர்ந்துள்ளது.

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31 சதவீத அதிகரிப்பாகும். இச்சோதனைகள் மூலம் 4,756 கைதுகள் இடம்பெற்றுள்ளதுடன், 2024 ஜூலைக்குப் பின்னரான மொத்தக் கைதுகளின் எண்ணிக்கை 17,000 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பிரித்தானியா முழுவதும் குடிவரவு குற்றங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கூட்டுச் சோதனைகளைத் தொடர்ந்தே இந்த புதிய புள்ளிவிவரங்கள்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top