News

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

 

பெரு நாட்டின் தெற்கு அண்டிஸ் மலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், சேத விபரங்கள் குறித்த தகவல் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.

உள்ளூர் நேரப்படி, மதியம் 1 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பெருவின், அயகுச்சோ பிராந்தியத்தின் பரினகோச்சாஸ் மாகாணத்தில் உள்ள உபஹுவாச்சோ நகரத்திற்கு வடமேற்கே 38 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.

இகா மற்றும் அரேகிபா உள்ளிட்ட தெற்கு பெருவின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நாட்டின், குடிமைப் பாதுகாப்புத் தலைவர் லூயிஸ், உள்ளூர் வானொலி ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை எவ்வித சேதமும் பதிவாகவிலலை என்று தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top