Canada renames Trump Avenue to Taco Avenue: கனடாவில் டிரம்ப் பெயரில் இருந்த தெருவிற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள “டிரம்ப் அவென்யூ” எனும் தெருவின் பெயரை மாற்ற நகரசபை முடிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் 26-ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், ஒட்டாவா நகரசபை உறுப்பினர்கள் ஒருமனதாக அந்த தெருவை “டாக்கோ அவென்யூ” என பெயர் மாற்றம் செய்ய தீர்மானித்தனர்.
இந்த தெரு, ஒட்டாவாவின் சென்ட்ரல் பார்க் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது.
ஆனால் சமீபத்தில் டிரம்ப், “Lake Ontario” ஏரியின் பெயரை “Lake America” என மாற்றுவதாக அறிவித்தது கனடா அரசியல்வாதிகளை கடுமையாகப் பாதித்தது. இதன் பின்னணியில், நகரசபை இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
சபை உறுப்பினர்கள், “டாக்கோ” என்ற பெயரை தேர்வு செய்ததற்கான காரணம், வால்ஸ்ட்ரீட்டில் டிரம்புக்கு வழங்கப்பட்ட “Trump Always Chickens Out” என்ற சுருக்கப்பெயர்.
அதாவது, கொள்கைகளை அடிக்கடி மாற்றும் பழக்கத்தைக் குறிக்கும் வகையில் “டாக்கோ” என அழைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், “ஒபாமா அவென்யூ” எனும் பெயரும் பரிசீலனையில் உள்ளது.
சில உறுப்பினர்கள், டிரம்ப் பெயர் கனடாவில் பல இடங்களில் இருப்பதாகவும், ஆனால் “டிரம்ப் அவென்யூ” மட்டுமே நேரடியாக அவரது பெயரில் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
ஒட்டாவா நகரசபை உறுப்பினர் ரைலி ப்ராக்கிங்டன், அக்டோபர் தேர்தலுக்குப் பிறகு குடியிருப்பாளர்களுடன் இணைந்து பெயர் மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அவர், “டிரம்ப் அவென்யூ” என்ற பெயர் நகரத்திற்கு அவமானம் எனக் கூறினார்.
இந்த முடிவு, கனடா-அமெரிக்க வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளில் ஏற்பட்ட பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.
