இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை ( 11) மாலை இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் உலங்கு வானூர்தி மூலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அடையாளம் தெரியாத ஒரு பொருள் மீது ரயில் மோதியதைத் தொடர்ந்து இந்தத் தடம்புரள்வு ஏற்பட்டுள்ளதுடன் விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளன.
விபத்துக்குள்ளான ரயிலில் 180 பயணிகள் பயணம் செய்துள்ளனர். சம்பவ இடத்தில் 140 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அந்நாட்டு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இரு நகரங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பயணிகளுக்காகப் மாற்றுப் பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்படுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
