News

சீனாவில் சோகம்.. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

 

சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 25 பேர் பலியாகி உள்ளனர்.

லைபீரியக் கொடியுடன் பயணிக்கும் ‘ஓஷன் மெலடி’ என்ற சரக்குக் கப்பல், பராமரிப்புப் பணிகளுக்காக கிங்டாவோ துறைமுகத்தில் சீனாவின் முக்கியக் கப்பல் போக்குவரத்து மையமான கிங்டாவோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த கப்பலில் திடீரென பயங்கர    தீ விபத்து     ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்ட சமயத்தில் கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்துள்ளனர்.

மீட்பு பணியின்போது கப்பலுக்குள்ளிருந்து 25 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன அரசு ஊடகமான Xinhua உயிரிழப்புகளை உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top