News

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று தீப்பற்றியதுடன், நகர முடியாத நிலையில் இருப்பதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான கடல் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்காக, பிற நாடுகள் ஈரானிய ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என ஈரான் கடற்படை வலியுறுத்தியுள்ளது.

இந்த அறிக்கையை ஈரானின் அரச ஒளிபரப்புச் சேவை வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள கடற்பகுதி, அரேபியக் கடல் மற்றும் ஓமன் வளைகுடா ஆகிய பகுதிகளில் தமக்கு முழுமையான கட்டுப்பாடும் உளவுக் கண்காணிப்பும் இருப்பதாக ஈரான் கடற்படை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், இரண்டு மிகப்பெரிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக வெள்ளிக்கிழமை பயணிக்க முயன்ற எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது இரண்டு தாக்குதல்கள் இடம்பெற்றதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பான UKMTO சனிக்கிழமை அறிவித்துள்ளது.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள இச்சம்பவங்கள், சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மற்றும் எண்ணெய் போக்குவரத்து தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top