கடந்த இருபது ஆண்டுகளில் இத்தாலியில் 58 பாதிரியார்கள் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற இத்தாலிய ஆயர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
பொலோக்னா பல்கலைக்கழகம் மற்றும் புளோரன்ஸில் உள்ள ‘இன்ஸ்டிட்யூட்டோ டெக்லி இன்னோசென்டி’ ஆகிய அமைப்புகளின் ஆய்வாளர்கள் இணைந்து இந்த அறிக்கையை தயாரித்தனர்.
அதன்படி, தேவாலய அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்ட 378 வழக்குகளில், 880 தனித்தனி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் பாதிக்கப்பட்ட 385 பேரில் சுமார் 70 சதவீதம் பேர் சிறுவர்கள்; குறிப்பாக 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட 356 பேரில், 123 பேர் இத்தாலிய நீதித்துறை முன் நிறுத்தப்பட்டு அவர்களில் 57 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சபை தரப்பில் 218 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சுமார் 70 சதவீதம் பேர் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 87 பேர் பதவி நீக்கம் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், 39 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர், மற்றும் 67 பேர் உயிரிழந்துவிட்டனர்
