வல்வெட்டித்துறையில் நேற்று (26.11.2026) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, அவரது பூர்வீக வீடு அமைந்திருந்த காணி சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டது.
இதேவேளை நிகழ்விடத்தில் வல்வெட்டித்துறை காவல் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதன்போது அனுமதியின்றி ட்ரோன் கமராவைப் பயன்படுத்திப் படம்பிடித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுப் காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் , மரக்கன்றுகளை வழங்கி வைக்கப்பட்டது.
