News

டெக்டானிக் தட்டு நகர்வதால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – இந்திய அரசுக்கு அவசர எச்சரிக்கை

 

எதிர்வரும் வாரத்தில் இந்தியாவின் ஹிம்ச்சல் – உத்தரகண்ட் மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பூர்ணசந்திர ராதி இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட இது ரிக்டர் அளவுகோலில் 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் இமயமலைப் பகுதியில் கடுமையான சேதத்தை உண்டாக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும் பல்வேறு டெக்டானிக் தட்டுகள் ஆண்டுக்கு ஐந்து சென்டிமீட்டர் வேகத்தில் நகர்கின்றன.

எனவே தற்போது மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள 18 நிலநடுக்க ஆய்வு மையங்கள் மூலம் தீவிர நிலநடுக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

இதேவேளை, இந்தியாவில் பாரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையின் கொழும்பு நகரை பாதிக்க வாய்ப்புள்ளதாக புவியியல் துறை பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top