நாட்டில் எதிர்வரும் காலத்தில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் ராஜபக்ச குடும்பத்தினரோ அல்லது அவர்களின் உறவினர்களோ அல்லது அவர்களின் நெருங்கிய நண்பர்களோ வெற்றியடைய இடமளிக்கக்கூடாது.
ராஜபக்ச பட்டாளத்தை கூண்டோடு நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும்! சந்திரிகா | Rajapaksa Family Friends Election Chandrika
ராஜபக்ச பட்டாளத்தை நாட்டு மக்கள் கூண்டோடு விரட்டியடிக்க வேண்டும்.” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நாட்டின் சொத்துக்களைச் சூறையாடி சுகபோகம் அனுபவித்த ராஜபக்ச பட்டாளம் மீண்டும் அதிகாரத்தைக் கையில் எடுக்கத் துடிக்கின்றது.
பிரதமர் பதவி என்ற கதை எமது காதில் கேட்கின்றது. மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சக்கள் ஏதோவொரு வழியில் மீண்டும் அதிகாரத்தில் அமர படாதபாடு படுகின்றனர்.
இது வெட்கக்கேடு; அவமானம். எந்தத் தேர்தல் நடந்தாலும் ராஜபக்ச பட்டாளத்தை நாட்டு மக்கள் கூண்டோடு விரட்டியடிக்க வேண்டும்” – என சந்திரிகா தெரிவித்துள்ளார்.