News

டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் கடைசி நிமிடங்களில் என்ன நடந்திருக்கலாம்?

உலகின் மிக பேரழிவான கடல் விபத்தாக பார்க்கப்படும் டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது.

இதன் சிதலமடைந்த பாகங்களை பார்வையிடவும், ஆய்வு செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது அமெரிக்காவை சேர்ந்த ஓசன்கேட்.

இதற்காக நீர்மூழ்கி கப்பல் ஒன்று தயாரிக்கப்பட்டு சாகச சுற்றுலா செல்லும் திட்டத்தையும் தொடங்கியது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 46 பேர் பயணித்துள்ள நிலையில், கடந்த 18ம் திகதி 5 பேர் கொண்ட குழுவினர் டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணத்தை தொடங்கினர்.

இங்கிலாந்து தொழிலதிபர் ஹாமிஸ் ஹார்டிங், இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளி தொழில் அதிபர் ஷாஜாடா மற்றும் அவரது மகன் சுலைமான் தாவூத், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டைவர் பால் ஹென்றி, ஓசன்கேட் சாகச சுற்றுலா நிறுவனத்தின் சிஇஓ.,வும், நீர்மூழ்கியின் பைலட்டுமான ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் பயணம் செய்தனர்.

புறப்பட்ட 1 மணிநேரத்தில் தகவல் தொடர்பு துண்டான நிலையில் தேடுதல் பணிகள் முடக்கிவிடப்பட்டது.

தீவிர தேடுதலுக்கு பின்னர், டைட்டானிக் கப்பல் மூழ்கி கிடக்கும் இடத்திலிருந்து 1600 அடி ஆழத்தில் டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அதில் பயணம் செய்த அனைவருமே இறந்திருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை அறிவித்தது.

ஆழ்கடலில் உள்ள அதிக அழுத்தம் காரணமாக டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கு Catastrophic Implosion, அதாவது பெரு வெடிப்பு என்று விவரிக்கின்றனர். அதிக அழுத்தம் காரணமாக உட்புறமாக வெடித்து சிதறுவதையே இது குறிக்கிறது.

30 நொடிகளில் இந்த வெடிப்பு நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது, எனினும் நீர்மூழ்கியின் சிதைந்த பாகங்களை ஆய்வு செய்த பின்னரே முழுமையான கிடைக்கலாம் என தெரிகிறது.

அதிக அழுத்தம் காரணமாக விபத்து நடந்திருப்பதால் பயணித்தவர்களின் உடல்களை மீட்பதும் கடினமே என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top