News

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி:

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போதிலும், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரே நாளில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெப்ஷித்தில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்; 7 பேர் காயமடைந்தனர்.

மற்றுமொரு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். துல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

ஹரூப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு வீடு முழுமையாகத் தகர்க்கப்பட்டதுடன், 2 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் லெபனான் ராணுவ வீரர்கள் இருவரும், மூன்று அவசர சிகிச்சை ஊழியர்களும் அடங்குவர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தெற்கு லெபனானில் உள்ள 15 நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top