News

இஸ்ரேல் வேரோடு பிடுங்கப்படும்..! ஹஜ் செய்தியில் ஈரானின் உச்ச தலைவர் சபதம்

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி, ஹஜ் மற்றும் ஈத் அல்-அதா (பக்ரீத்) பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள ஒரு செய்தியில், இஸ்ரேல் “நிச்சயமாக வேரோடு பிடுங்கப்பட வேண்டும், அது நடக்கும்” என்று அறிவித்துள்ளார்.

அவர் இஸ்ரேலை “இந்த பிராந்தியத்தின் ஆபத்தான மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு புற்றுநோய் கட்டி” என்று விபரித்துள்ளதாக ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது திணிக்கப்பட்ட போர் என்று அவர் குறிப்பிட்ட காலப்பகுதியில், ஈரான் “தனது அழிவுகரமான தாக்குதல்களின் மூலம் சியோனிச ஆட்சியை (இஸ்ரேலை) ஆதரவற்றதாக்கியது” என்று கமேனி கூறியுள்ளார் மேலும், இது அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்ட ஒரு “கடுமையான அடி” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் ஹஜ் பருவம் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் நிராகரிப்பதற்கான அழைப்பிற்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளித்துள்ளதாகவும், “அமெரிக்காவிற்கு மரணம்” மற்றும் “இஸ்ரேலுக்கு மரணம்” ஆகிய முழக்கங்கள் “இஸ்லாமிய சமூகத்தின் பரவலான முழக்கமாக மாறும்” என்றும் அவர் கூறியுள்ளார் .

மேலும், “எதிர்காலம் இஸ்லாமிய சமூகத்திற்கும் புதிய இஸ்லாமிய நாகரிகத்திற்கும் உரியது” என்றும் கமேனி தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top