News

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 15 பேர் பலி

 

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பனு மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினரின் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் நேற்று பாதுகாப்புப்படையினர் வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, சோதனைச்சாவடிக்கு வெடிபொருட்கள் அடங்கிய வாகனத்தை பயங்கரவாதிகள் ஓட்டி வந்தனர். அந்த வாகனத்தை சோதனைச்சாவடி மீது மோதச்செய்து பின்னர் அதை வெடிக்கச்செய்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top