News

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்பு

 

இங்கிலாந்து பிரதமர் பதவியை கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்க உள்ளார்.

கடந்த 2024-ம் ஆண்டு நடந்த இங்கிலாந்து பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்றார். இதனிடையே, இங்கிலாந்து பிரதமராக செயல்பட்டு வந்த கீர் ஸ்டார்மரின் செல்வாக்கு கட்சிக்குள் குறையத்தொடங்கியது.

நாட்டின் பொருளாதார தேக்க நிலை, பணவீக்கம், உதவித்தொகை ரத்து, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்களில் கீர் ஸ்டார்மரின் செல்வாக்கு ஆளும் கட்சி எம்.பி.க்கள் மத்தியில் குறையத்தொடங்கியது. கடந்த மே மாதத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் தொழிலாளர் கட்சி படுதோல்வியடைந்தது.

அதேவேளை, தொழிலாளர் கட்சியில் ஸ்டார்மருக்கு மாற்றாக மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் பார்க்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த மேக் கர்பீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் போட்டியிட்டு 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் தோல்வி, சொந்த கட்சி மந்திரிகளின் எதிர்ப்பு உள்பட பல்வேறு காரணங்களால் இங்கிலாந்து பிரதமர் பதவியை கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, தொழிலாளர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆண்டி பர்ன்ஹாம், இங்கிலாந்து பிரதமராக நாளை பதவியேற்க உள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top