சிலி நாட்டில் கடற்படை வீரர் ஓட்டிய கார் திருவிழாவுக்குள் புகுந்து மோதியதில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
சிலி நாட்டின் கடலோர நகரான வினா டெல் மார் நகரில், கவுபோலிகன் என்ற புகழ்பெற்ற வீதித்திருவிழா நடத்தப்பட்டது.
உள்ளூர் திருவிழாவாக நடத்தப்பட்ட இதில் பங்கேற்பதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். விடுமுறை நாளான நேற்று முன்தினம் பொழுதுபோக்கும் வகையில் சிறுவர் சிறுமிகள், பெண்கள் என பலரும் திரண்டு வந்திருந்தனர்.

அப்போது, கடற்படை வீரர் ஒருவர் ஓட்டி வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. கடைகளையும் நொறுக்கித்தள்ளியபடி சென்றது.
இதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியானார்கள். மேலும், 2 குழந்தைகள் உள்பட பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய கடற்படை வீரரின் காரை, பொதுமக்கள் கட்டைகளை கொண்டு கடுமையாக தாக்கினர்.
போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டினாரா அல்லது அலட்சிய போக்கால் விபத்து ஏற்படுத்தினாரா? என விசாரித்து வருகின்றனர்.