கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை மதியம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சந்தேக நபரான துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
7 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயிலும் டம்ப்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பாடசாலையில் மதியம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்தவுடன், பொலிஸார் உடனடியாக அந்தப் பகுதியில் அவசரகால எச்சரிக்கையை விடுத்தனர்.
பொலிஸார் உடனடியாக பாடசாலைக்கு நுழைந்து சோதனை செய்தபோது, பாடசாலை வளாகத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். மற்றொரு இடத்தில் மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டன.
மருத்துவமனை செல்லும் வழியில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் சந்தேக நபர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த நிலையில் பாடசாலை வளாகத்தில் மீட்கப்பட்டுள்ளார்.
