\சௌதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ராணுவத்தினர் நடத்திய அதிரடி டிரோன் தாக்குதலில், தூதரகக் கட்டடம் மற்றும் அருகில் இருந்த கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்தன.
ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் சேர்த்து கடந்த சனிக்கிழமை நடத்திய அதிரடி தாக்குதலில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி உள்பட ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தப் போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், சௌதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) தாக்குதல் நடத்தியதில் கட்டடங்கள் முழுமையாக சேதமடைந்தன.
மத்திய கிழக்கு நாடுகள் நான்கு நாள்களாக பற்றி எரிந்து வரும் நிலையில், இந்த டிரோன் தாக்குதலை சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
