ஈரானில் அண்மையில் பள்ளியொன்றில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் சுமார் 165 சிறுமிகள் பலியான சம்பவத்துக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்தார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதலைத் தொடங்கிய முதல் நாளான கடந்த பிப். 28, தெற்கு ஈரானின் மினாப் நகரில் பள்ளியொன்றில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் சுமார் 165 சிறுமிகள் கொல்லப்பட்டனர். இதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகளே பொறுப்பு என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
இதனிடையே, இந்தத் தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
