தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டு வரும் அசுர வளர்ச்சியைத் தொடர்ந்து, அலுவலகப் படிநிலைகளில் (Office Hierarchy) மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பல நிறுவனங்கள் இப்போது ‘செயற்கை நுண்ணறிவு முகவர்களை’ (AI Agents) மேலாண்மைப் பணிகளில் சோதனை செய்து வருகின்றன.
அதாவது, இனி ஊழியர்களுக்கு வேலைகளை ஒதுக்குவது, அவர்களின் செயல்திறனைக் கண்காணிப்பது மற்றும் திட்டங்களை நிர்வகிப்பது போன்ற பணிகளை ஒரு மனித மேலதிகாரிக்கு பதிலாக ஒரு மென்பொருள் (AI) செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
முன்பெல்லாம் தரவுகளைச் சேகரிக்க மட்டுமே பயன்பட்ட AI, இப்போது முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்று வருகிறது இது நிறுவனங்களின் செலவைக் குறைப்பதோடு, வேலைகளை விரைவாக முடிக்க உதவுகிறது.
AI மேலதிகாரிகளின் வருகையால், இடைநிலை மேலதிகாரிகளின் (Middle Managers) தேவை குறைந்து வருகிறது.
இது பலருக்கு வேலைவாய்ப்பு குறித்த கவலையை ஏற்படுத்தினாலும், நிறுவனங்கள் இதைத் தங்களது இலாபத்தை அதிகரிக்கும் ஒரு வழியாகப் பார்க்கின்றன.
ஒரு மென்பொருள் மேலதிகாரியாக இருக்கும்போது, ஊழியர்களுடனான மனிதாபிமான அணுகுமுறை மற்றும் உணர்வுபூர்வமான புரிதல்கள் (Emotional Intelligence) இருக்காது என்பது இதிலுள்ள ஒரு பெரும் சவாலாகக் கருதப்படுகிறது.
