அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் பாதுகாப்பு தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக சர்வதேச நிறுவனங்களின் இரு அறிக்கைகளை மேற்கோள்காட்டி சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர் அசங்க அபேகுணசேக்கர தெரிவித்துள்ளார்.
இவர் புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர், ஆராய்ச்சியாளர், வருகைதரு விரிவுரையாளர், ஆசிரியர், கட்டுரையாளர் ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட ஆலோசகர்,உறுப்பினர் கல்வி ஆலோசனைக் குழு பதவிகளை வகிக்கின்றார்.
இவர் எழுதிய நூலான ‘வின்ஷ் ஒப் சேன்ஞ” ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நூல் சிங்கப்பூரிலுள்ள மிகப் பெரிய அச்சக நிறுவனம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
குறித்த நூலில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ரேன்ட் கோப்பரேசன்ஸ் (RAND Corporation) அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு மற்றும் வலய பாதுகாப்பு தொடர்பான ஆராச்சிகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனமாகும்.
அந்த நிறுவனம் செய்த ஆராய்ச்சி அறிக்கை மற்றும் ஏயிட் டேடா ஆராய்ச்சி அறிக்கைகளை ஆராய்ந்தே இதை நான் எழுதியுள்ளேன்.
ஏயிட் டேடா ஆராய்ச்சிகளில் கட்டாயம் இலங்கையில் சீனாவின் இராணுவ பாதுகாப்புத் தளம் அமைக்கப்படும் என தெரிவிக்கிறது.
ஆனால் ரென்ட் டேடாவில் குறிப்பிடுவது என்வென்றால் டியர் இரண்டு (tier 2) என குறிப்பிடுகிறது. அதாவது குறிப்பிட்டு சொல்ல முடியாது என்கிறது ரென்ட் டேடா.
ஆனால் ஏயிட் டேடா ஆராச்சி அறிக்கை குறிப்பில் டியர் 1 (tier 1) என தெரிவிக்கிறது. திபெத்தில் அமைந்துள்ள சீனாவின் இராணுவத் தளத்தின் பின்னர் தென் கிழக்கு ஆசியாவிலே அமைக்கப்படும் என நான் நினைக்கிறேன்.
கம்போடியாவுக்கு அருகாமையில் இருக்கும் ரேயன் போட்டில் ரேயன் துறைமுகத்தில் அமைக்கப்படும் என ரென்ட் டேடா அறிக்கையில் டியர் 1 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சமுத்திரத்தில் சீனா இராணுத் தளம் அமைக்கும் என்றால் தென்கிழக்காசிவுக்கு பின்னரே அம்பாந்தோட்டையில் அமைக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
