News

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலின் எண்ணிக்கை 773! 103 குழந்தைகள் பலி !

லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 773 ஆக அதிகரித்துள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான இஸ்ரேல் ராணுவம் கடந்த மார்ச் 2 முதல் அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இதையடுத்து, லெபனானின் தலைநகர் பெய்ரூட்டிற்குள் இஸ்ரேலின் படைகள் ஊடுருவியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் வசித்த மக்களை உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தி வருகின்றது.

இந்த நிலையில், கடந்த மார்ச் 2 முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) வரையிலான இஸ்ரேலின் தாக்குதல்களில் லெபனானில் இதுவரை 773 பேர் கொல்லப்பட்டதாக, அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் லெபனானில் இதுவரை 103 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 1,933 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top