அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் சிறந்த நட்புணர்வு இல்லை. வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபரை அமெரிக்கா சிறைப்பிடித்தது. அதில் இருந்து கியூபாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கியதை வெனிசுலா நிறுத்தியது. ஏற்கனவே உள்நாட்டு கட்டமைப்பு சரியில்லாததால் கியூபா எரிபொருள் தட்டுப்பாட்டால் திண்டாடி வருகிறது.
இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்த போதிலும், பேச்சுவார்த்தையில் இடம்பெறும் அம்சங்கள் குறித்து அமெரிக்கா எந்த தகவலையும் பகிரவில்லை. இந்த நிலையில், கியூபா மீது அமெரிக்கா படையெடுத்தால் அது கடும் விலையை ஏற்படுத்தும் என்று கியூபா அதிபர் மிகுவல் டியாஸ்- கேனல் தெரிவித்துள்ளார்.
இந்த நேரம் வரை, கியூபாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கவோ அல்லது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தவோ அல்லது அதிபரை கடத்தவோ அமெரிக்கா நியாயப்படுத்த எந்தவொரு காரணமும் இருப்பதாக நான் கருதவில்லை.
ஒருவேளை அது நடந்தால், அங்கே சண்டை நடக்கும். போராட்டம் நடைபெறும். நாங்கள் எங்களை பாதுகாப்போம். உயிரை விட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், உயிரை இழப்போம். ஏனென்றால், தாய் நிலத்திற்காக உயிர் விடுவதே உண்மையான வாழ்வு என தேசியகீதம் சொல்கிறது.
