News

இஸ்ரேல்-லெபனான் நேரடி: பேச்சுவார்த்தைக்கு ஜெர்மனி அதிபர் ஆதரவு

 

இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் இடையே வாஷிங்டனில் நேரடி அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இதுகுறித்து. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தைக்கு மெர்ஸ் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார். தெற்கு லெபனானில் நிலவும் போர்ச் சூழல் முடிவுக்கு வர வேண்டும் என்றும், ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் உடனடியாகத் தங்களது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், கடல் வழிப் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க ஜெர் மனி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் மேற் கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்தும் மெர்ஸ் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top