செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று(30.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்பு கூடு 211 மற்றும் 220 உடைய பகுதியளவான எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு, நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடமேற்கு பகுதியாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சில என்புத் தொகுதிகளின் இருப்புகள் அடையாளம் காணப்பட்டிருந்தது.
இன்றைய தினம் அகழ்வுடன் மொத்தமாக 241 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 240 என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதில், நாணயத்தை ஒத்த சான்றுப் பொருட்கள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று(29) காணப்பட்ட மண் பகுதி மாத்திரம் அரித்தெடுக்கப்படும் செயற்பாடு நடைபெறுகிறது.
இதன்போது, தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.
