News

பொலிவியாவில் அதிபருக்கு எதிராக போராட்டம்: பெரும் பதற்றம்- ராணுவம் குவிப்பு

 

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் புதிய அதிபர் ரொட்ரிகோ பாஸ் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 வாரங்களாக நாடு தழுவிய போராட்டம் வெடித்துள்ளது.

இதற்கிடையில் தலைநகர் லா பாஸில் ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் திரண்டு பிரம்மாண்ட பேரணி நடத்தினர். தொழிலாளர் சீர்திருத்தம் மற்றும் எரிபொருள் கேட்டு நடந்த இந்த பேரணியில் திடீரென பயங்கர வன்முறை வெடித்தது.

அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள், அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீது சிறிய ரக டைனமைட் வெடிபொருட்களை வீசி அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், கூட்டத்தைக் கலைக்க கண்மூடித்தனமாக கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக மாறி போர்க்களமானது.

சம்பள உயர்வு கேட்டு ஆசிரியர்களும், நிலச் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளும் போராடி வருவதால் ஒட்டுமொத்த தலைநகரமும் ஸ்தம்பித்துள்ளது.

தற்போது,”அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என போராட்டக்காரர்கள் கோஷமிட்டு வருவதால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு பெரும் பதற்றம் நிலவுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top