News

காமேனியின் உடல் ஜூலை 9-ல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிப்பு

 

தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது அமெரிக்கா. இந்த கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் சவுதி, குவைத், துபாய் உள்ளிட்ட நகரங்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள், டிரோன்களை ஏவி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தது. மேலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கியது.

ஈரானின் மிகவும் பாதுகாப்பான வான்பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி, அந்த நாட்டின் மிக முக்கியமான அரசியல் மற்றும் நிர்வாக மையமான தலைநகர் தெஹ்ரானில் உள்ள பாஸ்டர் தெருவில் உள்ள மதகுருவின் மாளிகையில் நடத்தப்பட்ட கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி அயத்துல்லா காமேனி (86) உள்பட முக்கியத்துவம் வாய்ந்த 45-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர். காமேனி மட்டுமின்றி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், 36 ஆண்டுகளாக ஈரானைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த காமேனியின் உடல், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மஷ்ஷாத்தில் அவரது தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இமாம் ரெசா கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் உடல் ஜூலை 9ம் மஷ்ஹாத் நகரில் உள்ள இமாம் ரெசா புனிதத்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்குகள் ஜூலை 4 முதல் 7ம் தேதி வரை டெஹ்ரான் மற்றும் கோம் நகரங்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top