Canada

கனடா நோக்கிப் படையெடுக்கும் பிரித்தானிய மருத்துவர்கள்!

 

பிரித்தானியாவிலுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ விசேட நிபுணர்கள் பெருமளவில் கனடாவிற்குப் புலம்பெயரத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் கடந்த பல மாதங்களாக நீடித்து வரும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஊதியக் குறைபாடுகள் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

குடும்ப மருத்துவர்களின் பற்றாக்குறையால் தவித்து வரும் கனடாவிற்கு பிரித்தானிய மருத்துவர்களின் இந்தப்படையெடுப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் பொதுச் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மருத்துவப் படிப்பை முடிப்பவர்களுக்கே வேலை கிடைப்பதில்லை எனவும் வேலை கிடைத்தாலும் மற்ற மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஊதியம் மிகக் குறைவாகவே உள்ளதாகவும் மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாகப் பிரித்தானியாவிலுள்ள மருத்துவர்கள் ஜூன் 15 திங்கட்கிழமை முதல் மீண்டும் ஒரு பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை (Walkout) முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அரசாங்கத்துடனான இந்த நீண்டகாலப் பூசலில் அவர்கள் மேற்கொள்ளும் 16ஆவது வேலைநிறுத்தம் இதுவாகும்.

பிரித்தானியாவில் நிலவும் சூழ்நிலைக்கு நேர்மாறான நிலை கனடாவில் உள்ளது.

இங்கு நோயாளிகளுக்குப் போதுமான குடும்ப மருத்துவர்கள் (Family Doctors) இல்லை.

ஹெல்த் கனடா (Health Canada) அமைப்பின் 2025ஆம் ஆண்டு அறிக்கையின்படி கனடாவில் 22,800க்கும் அதிகமான குடும்ப மருத்துவர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top