News

கொழும்பில் 5000ற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்களால் படைக்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் இன்று(14) வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வொன்று இடம்பெற்றள்ளது.

5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி (Bharatanatyam Dance Lesson) என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர்.

இந்த நிகழ்வு இந்தியாவின் சங்கமம் குளோபல் அகாடமி (Sangamam Global Academy) மற்றும் இலங்கையின் சங்கமிழ் லியா (Samgamizh Liya) ஆகிய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பில் 5000ற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்களால் படைக்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை | Guinness Record Set By 5 000 Bharatanatyam Dancers

கொழும்பில் 5000ற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்களால் படைக்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை | Guinness Record Set By 5 000 Bharatanatyam Dancers

கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற இந்தநிகழ்வில் இலங்கை, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று இந்திய பாரம்பரிய நடனக் கலையையும் கலாசார மரபையும் கொண்டாடினர்.

கொழும்பில் 5000ற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்களால் படைக்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை | Guinness Record Set By 5 000 Bharatanatyam Dancers

 

பரதநாட்டியத்தின் தொன்மையான பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதோடு, நாடுகளுக்கிடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.

பாரம்பரிய ஆடைகளை அணிந்திருந்த கலைஞர்கள், குருமார்களின் வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைந்த நடன அசைவுகளை நிகழ்த்தி உலக சாதனை முயற்சியில் பங்கேற்றனர்.

Gallery

நிகழ்ச்சிக்குப் பின்னர் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவுசெய்யப்பட்டு, சாதனைக்கான சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கலைஞர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களின் சார்பில் கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

Gallery

 

அங்கு உரையாற்றிய அவர், உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்ற கலைஞர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் கலாசாரத்தின் முக்கிய பங்கையும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர்களான சுந்தரலிங்கம் பிரதீப், மகிந்த ஜயசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பெருமளவிலான மக்கள் திரண்டிருந்த இந்நிகழ்வு, பிராந்தியத்தின் பகிரப்பட்ட கலாசார மரபுகளைப் போற்றும் விழாக்கோலத்துடன் நடைபெற்றது.

Gallery

 

இந்த சாதனை, உலக பரதநாட்டிய சமூகத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மதிப்புமிக்க செவ்வியல் நடன வடிவங்களில் ஒன்றான பரதநாட்டியத்தின் நிலைத்த புகழையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

GalleryGalleryGallery

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top