News

இந்தோனேசியாவில் நடுகடலில் பற்றி எரிந்த பயணிகள் படகு…! 5 பேர் பலி – 41 மாயம்

இந்தோனேசியாவில் கடலில் பயணித்துக்கொண்டிருந்த பயணியர் படகு திடீரென தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த படகு 271 பயணிகளுடன் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தெரியவருகையில், இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான கிழக்கு ஜாவாவிலுள்ள சுராபாயாவிலிருந்து (Surabaya), தெற்கு சுலாவெசியிலுள்ள மக்காசர் (Makassar) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே, மடுராத் தீவுக்கு (Madura island) அருகே கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

 

இத்தீ விபத்து குறித்துக் கப்பலின் மாலுமி உடனடி தகவலை வழங்கியதாக இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை (Basarnas) தெரிவித்துள்ளது.

காணாமல் போன 41 பேரைக் கண்டறியும் பணியில் இந்தோனேசிய மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top