பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்குட்பட்ட தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள வீதிப் சோதனைச் சாவடி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இடம்பெற்ற இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஏழு பாதுகாப்புப் படையினரும் அடங்குவதோடு, காயமடைந்தவர்களில் 20 பேர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்குத் தாங்களே பொறுப்பேற்பதாக தெஹ்ரீக்-ஈ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பு அறிவித்துள்ளது.
