News

ஈரானில் திடீரென்று இரகசியமாக தரையிறங்கிய சீனாவின் 4 விமானங்கள்!

ஈரானுக்குள் சீனாவின் நான்கு சரக்கு விமானங்கள் சென்றுள்ளதாகவும் அவை சந்தேகத்திற்கு இடமானவை என்கின்ற குற்றச்சாட்டு அமெரிக்க தரப்பால் முன்வைக்கப்படுகின்றது.

இந்தநிலையிலே, குறித்த நான்கு விமானங்களிலும் பெரும் சிறப்பொன்று இடம்பெற்றிருக்கின்றது.இராணுவ வல்லுநர்கள் அதனை உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

டிராப்ஸ் என்கின்ற பட்டனை நிறுத்திய பின்னர் தான் ஈரானுக்குள் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளது.இந்த பட்டன் மூலம் விமானங்கள் வானில் மோதிக் கொள்வது தவிர்க்கப்படும்.

வானில் பறக்கும் போதே அனைத்து விமானங்களும் டிராப்ஸ் பட்டன்களை ஆரம்பித்து வைத்திருக்கும்.ஆனால் சீனா அந்த பட்டன்களை நிறுத்திய பின்னர் தான் ஈரானில் தனது நான்கு விமானங்களையும் இரகசியமாக தரையிறக்கி உள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தை சீனா பல இடங்களில் முயற்சி செய்ததாக தெரியவில்லை.ஆனால் ஈரானின் யுத்தக் களமுனையில் சீனா முதன்முறையாக பரிசோதித்து பார்த்து இருக்கின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top