News

ஜப்பானுக்கு மீண்டும் விடுக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்க எச்சரிக்கை

 

ஜப்பானுக்கு இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு பெரிய நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு இரண்டாவது முறையாக நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, எதிர்வரும் வாரத்தில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஜப்பானிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் 8.0 அல்லது அதற்கும் அதிகமான ரிக்டர் அளவில் பதிவாகக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

நேற்றைய தினம் வடகிழக்குக் கடற்கரைக்கு அப்பால் ரிக்டர் அளவுகோலில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி அலைகள் நாட்டின் கிழக்குக்கடற்கரையை எட்டின.

புவியியல் ரீதியாக ஜப்பான் “நெருப்பு வளையத்தில்” அமைந்துள்ளதால், ஆண்டுக்கு சுமார் 1,500 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

மேலும், உலகளவில் 6.0 ரிக்டர் அளவுக்கு மேல் ஏற்படும் நிலநடுக்கங்களில் 10% ஜப்பானில் இருந்து பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top