News

டென்மார்க்கில் நேருக்கு நேர் மோதிய தொடருந்துகள்: 17 பேர் படுகாயம்

டென்மார்க்கில் இரண்டு உள்ளூர் தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களுள் நால்வரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை காலை சுமார் 6.30 மணியளவில் தலைநகர் கோபன்ஹேகனிலிருந்து வடக்கே சுமார் 40 கி.மீ (25 மைல்) தொலைவில் நிகழ்ந்ததுள்ளது.

ஹில்லரோட் மற்றும் காகெருப் நகரங்களை இணைக்கும் தொடருந்து பாதையில் இரண்டு உள்ளூர் தொடருந்துகளும் மோதிக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

டென்மார்க்கில் நேருக்கு நேர் மோதிய தொடருந்துகள்: பலர் படுகாயம் | Two Trains Collide Head On In Denmark

விபத்தில் மேலும் 12 பேர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர் என கிரேட்டர் கோபன்ஹேகன் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மேயர் டிரைன் எகெட்வெட் இந்த விபத்தால் தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக முகநூலில் தனது தெரிவித்துள்ளார்

கிரிப்ஸ்கோவ் நகராட்சியின் மேயரான எகெட்வெட்இ படுகாயமடைந்தவர்கள் கோபன்ஹேகனில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த உள்ளூர் தடகளப் பாதையை கிரிப்ஸ்கோவ் நகரவாசிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பயன்படுத்துகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளனார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top