லெபனானில் போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளபோதும், ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக, தெற்கு லெபனானில் உள்ள மூன்று பகுதிகளில் ஹிஸ்புல்லாவை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டது என இஸ்ரேலியப் பாதுகாப்புப்படைகள் இதனை தெரிவித்துள்ளன.
ஹிஸ்புல்லாவால் தங்கள் மக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இஸ்ரேலும் லெபனானும் 23ஆம் திகதி முதல் போர் நிறுத்தத்தை எட்டியுள்ள நிலையில், ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
