சுற்றுலா கப்பலில் கண்டறியப்பட்ட ஹான்டாவைரஸின் மரபணு வரிசையை உறுதி செய்து இருப்பதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.
MV Hondius சுற்றுலா கப்பலில் பயணம் மேற்கொண்ட பயணிகள் பெரும்பாலானோர் ஆண்டீஸ் ஹான்டா(Andes Hantavirus) வைரஸினால் பாதிக்கப்பட்டனர்.
இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சுகாதார துறையில் மிகப்பெரிய பீதியையும் கிளப்பியது.
இந்நிலையில் ஹான்டா வைரஸ் வகையின் மரபணு வரிசைமுறையை பாஸ்டர் நிறுவனம் வெற்றிகரமாக செய்து முடித்து இருப்பதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் தெரிவித்துள்ளார்.
மரபணு பகுப்பாய்வின் படி, கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் ஏற்கனவே தென் அமெரிக்காவின் கண்காணிக்கப்பட்டு வரும் வைரஸ் மரபணுவுடன் ஒத்துப் போவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் ஸ்டெபானி வெளியிட்ட X தளப் பதிவில், கண்டறியப்பட்ட ஹான்டா வைரஸ் வேகமாக பரவ கூடியது, அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியது என்பதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கண்டறியப்பட்ட வைரஸின் மரபணு வரிசை தரவுகளை உலக அறிவியல் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
