குவைத்தின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஈரானிலிருந்து 21 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன.
4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 21 ஆளில்லா ட்ரோன்களை தங்களது ஆயுதப் படைகள் இடைமறித்து அழித்துள்ளதாக குவைத் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தற்போது அறிவித்துள்ளார்.
இத்தாக்குதல்கள் தொடர்பாக அவர் மேலும், “ஈரானின் இந்த வான்வழித் தாக்குதல்கள் குவைத்தின் முக்கிய மற்றும் அதிமுக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டன.
இதனால் சில பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாம் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் முன்னதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
